இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக

கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான்.


மற்ற பத்திரிகைகள் எப்படியோ 'தினமலர்' இதழை பொறுத்தவரை வாசகர்களிடம் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.


கன்டெய்னரில் வரும் பேப்பர் ரீலை எடுப்பது, பின் அதுவாகவே மிஷினில் பொருந்திக் கொள்வது, கம்ப்யூட்டர் மூலம் கொடுக்கப்படும் உத்திரவிற்கு ஏற்ப பிரிண்ட் ஆவது, பிரிண்ட் ஆன பேப்பர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, தானாகவே கட்டுப்போடப்பட்டு வேனில் போய் விழுவது வரை எந்த இடத்திலும், மனிதர்கள் கைபடாமல் தானாகவே நடக்கிறது. இந்த பேப்பர் கட்டுகள்தான் ஏஜன்ட்டுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு மறுநாள் காலை உங்கள் வீடுகளுக்கும் கடைகளுக்கும் வந்து சேருகிறது.